search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் கண்டக்டர்"

    கோயம்பேட்டில் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பாரிமுனையில் இருந்து வடபழனி நோக்கி நேற்று மாலை மாநகர பஸ் (எண்.15எப்) வந்தது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் பஸ் வந்தபோது படிகட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை கண்டக்டர் தனசிங் இறங்குமாறு கூறினார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டர் தனசிங் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதனை அறிந்த மாநகர பஸ் டிரைவர்கள்-கண்டக்டர்கள் பஸ்சை ஓட்டாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை மீண்டும் இயக்க செய்தனர்.

    இதற்கிடையே கண்டக்டரை தாக்கியதாக சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்த செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    போரூரில் பஸ் கண்டக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    போரூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது45). ஐயப்பந்தாங்கல் பணிமனையில் மாநகர பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் நண்பருடன் வெளியே சென்ற மதிவாணன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை போரூர் ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதிவாணன் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மதிவாணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று முன் தினம் முன்பு மதிவாணன் நண்பர் ஒருவருடன் போரூர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றதும், அங்கு ஏற்பட்ட தகராறில் அவர் கொடூரமாக தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

    மதிவாணனுடன் சென்ற நண்பர் யார் என்று தெரியவில்லை. அவர் மதிவாணனை கொலை செய்து தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    இதற்கிடையே அப்பகுயில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளி உருவம் பதிவாகி உள்ளது. அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தக்கறை படித்த சட்டையை கழற்றி விட்டு புதிய சட்டையை மாற்றிக் கொண்டு செல்கிறார்.

    மேலும் மதிவாணனின் செல்போனையும் கொலையாளி எடுத்துச்சென்று உள்ளார். இதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    முன்விரோதம் காரணமாக மதிவாணன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை காரணமா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

    கண்டக்டர் இல்லாமல் பஸ் இயக்குவதை கண்டித்து வேலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர்:

    கண்டக்டர் இல்லாமல் பஸ்சை இயக்குவதை கண்டித்தும். போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட கோரியும். போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரியும். கண்டக்டர் இட ஒதுக்கீட்டை தட்டி பறிக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பு போக்குவரத்து அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பரசுராமன், ராமதாஸ், மோகன்ராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரசு பஸ்சில் நர்சை தரக்குறைவாக பேசிய கண்டக்டரால் பயணிகள் முகம் சுளித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர் பிச்சை. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ்சில் பணியில் இருந்தார். பெரியகுளம் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கும் பிரேமா தேனியில் ஏறினார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைசி இருக்கையில் அமர்ந் திருந்தார். பெரியகுளம் வரும் வரைக்கும் கண்டக்டர் அங்கு வராததால் லட்சுமிபுரத்தில் பிரேமா கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார்

    இதனால் கண்டக்டர் பிச்சை தரக்குறைவான வார்த்தைகளால் நர்சை திட்டினார். தேனியில் பஸ் ஏறி இவ்வளவு நேரம் எதற்காக டிக்கெட் எடுக்காமல் இருந்தாய் என கேவலமாக திட்டினார்.

    சக பயணிகள் கண்டக்டரிடம் எதற்காக அந்த பெண்ணை இப்படி திட்டுகிறீர்கள்? என கேட்டதற்கு அவர்களையும் கண்டக்டர் வசை பாடினார். இது குறித்து பயணிகள் கண்டக்டரின் பேச்சை செல்போனில் பதிவு செய்தனர். மேலும் பெரியகுளம் வந்ததும் பஸ்சை போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். ஆனால் நர்ஸ் பிரேமா தனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டதால் தான் செல்வதாக கூறி சென்று விட்டார். ஆனால் மற்ற பயணிகள் சம்மந்தப்பட்ட கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×